Album: Aasai Oviyum
Singer: Bharadwaj, Subhiksha Rangarajan
Music: Bharadwaj
Lyrics: Pa. Vijay
Label: Think Music (India)
Released: 2008-11-28
Duration: 04:32
Downloads: 1413
ஆசை ஓவியம் பேசும் ஓவியம் உன்னை வரையவேண்டுமடி வருவாயா? ஓவியம் வரைய
உன்னிடம் இருந்து வர்ணங்கள் கொஞ்சம் தருவாயா? கை விரல் என்பது
தூரிகையானால் காய்கிதமாகவும் வருவேனே வர்ணங்கள் என்ன நீ வந்துக்கேட்டால் உயிரை வழித்து
தருவேனே அடடா அடடா உலகத்தில் இல்லை எவனும் இதுபோல் வரைந்ததுமில்லை
காதலியே நீ நிறங்களின் பிள்ளை காதலியே நீ நிறங்களின் பிள்ளை
ஆசை ஓவியம் பேசும் ஓவியம் உன்னை வரையவேண்டுமடி வருவாயா? விண்ணை
விழுங்கிய விழிகளில் இருந்து நீல வர்ணம் தருவாயா? நீல வர்ணம் இருந்த
விழியில் நீயே விழுந்து விடுவாயா? உதடுகள் என்னும் செவ்வந்தி நிலத்தில் சிவப்பு
வர்ணம் தருவாயா? உதட்டில் வர்ணம் எடுக்கும் நேரம் உடம்பை சிவக்க வைப்பாயா?
கூந்தல் நெளிவில் கூச்சம் மறந்து கருப்பு வர்ணம் தருவாயா? கூந்தலின்
நிறத்தில் கண் தெரியாமல் நீயே தொலைந்து போவாயா? அடடா அடடா
உலகத்தில் இல்லை எவனும் இதுபோல் வரைந்ததுமில்லை என்னவளே நீ ஓவியச்சோலை
மகரந்தம் ஊறும் மேனியில் இருந்து மஞ்சள் வர்ணம் தருவாயா? மஞ்சள் வர்ணம்
பொங்கும் மேனியில் நீயே கரைந்து விடுவாயா? இச்சை நிலவே பச்சை நரம்பில்
பசுமை வர்ணம் தருவாயா? நரம்பு வழியே கசிய கசிய காதல் வழிய
செய்வாயா? வளையும் வயசே மனசில் இருந்து வெள்ளை வர்ணம் தருவாயா?
வெள்ளை வர்ணம் இருக்கும் மனசை கொள்ளையடித்து செல்வாயா? அடடா அடடா
உலகத்தில் இல்லை எவனும் இதுபோல் வரைந்ததுமில்லை இனியவளே நீ அழகுக்கு எல்லை
ஆசை ஓவியம் பேசும் ஓவியம் உன்னை வரையவேண்டுமடி வருவாயா?