Album: Chellame Idhu
Singer: Karthik, Sunitha Sarathy, Shankar Mahadevan, Sadhana Sargam, Prasanna, Kalyani Nair, Vijay Yesudas, Yuvan Shankar Raja, Kay Kay Menon, Shreya Ghoshal, Madhu Balakrishnan, Madhushree, P. Unnikrishnan, Sujatha Mohan
Music: Niru
Lyrics: Yugabharathi
Label: Star Music
Released: 2003-02-06
Duration: 04:50
Downloads: 56305
செல்லமே இது இரவா பகலா… தெரிந்து கொள்வேன் உடனே தொடவா… உயிரைத்
தின்னும் காதல் தீயே… இனிய கொடுமை நீயே நீயே… கொட்டும்
வேர்வை அட்சதையாக… கொள்ளை அழகு வெற்றிலையாக… மென்று விடுவேன் இதழ்கள் ஊற…
உடலும் உயிரும் வேக வேக… இரவு கருகிட அரும்ப வேண்டும்…
இதயம் உருகிட விரும்ப வேண்டும்… நாணம் முழுவதும் தீர தீண்ட வா…
ஆஆ… தீ தீண்ட வா… அழகுக்கு நீயோர் அகராதி போல…
அதன் அர்த்தம் யாவும்… நான் அறிந்து கொள்ள வேண்டும்… ம்ஹ்ம்ம்…
இவளுக்கு நீ ஓர் மருதாணி போல… உடல் எங்கும் பூசு… நான்
உயிர் சிவக்க வேண்டும்… ம்ம்ம்… உடைகளை உடைத்தால் புது வெள்ளம்
இங்கு பாயுமே… கரைவழி எல்லாம் தடை இன்றி இன்பம் சேருமே… செய்முறை
நேரம் விளக்கம் ஏன் வேண்டாமே… செல்லமே இது இரவா பகலா…
தெரிந்து கொள்வேன் உடனே தொடவா… உயிரைத் தின்னும் காதல் தீயே… இனிய
கொடுமை நீயே… ஒரு நூறு பெண்கள் உருவாக்கும் போதை… உன்னிடம்தானே
நான் பருகப் பருக வேண்டும்… ஹ்ம்ம்… உன்னைச் சேரும் நேரம்
உயிர் போக வேண்டும்… போனாலும் நானே உன் நினைவில் வாழ வேண்டும்…
ம்ம்… தருவதைத் தந்தால் தவறில்லை இங்கு ஏதுமே… இடைவெளி எல்லாம்
இனியில்லை எந்த நாளுமே… நரை தொட்ட போதும் முடிவே ஏன் வேண்டாமே…
செல்லமே இது இரவா பகலா… தெரிந்து கொள்வேன் உடனே தொடவா…
உயிரைத் தின்னும் காதல் தீயே… இனிய கொடுமை நீயே நீயே
செல்லமே இது இரவா பகலா… தெரிந்து கொள்வேன் உடனே தொடவா… உயிரைத்
தின்னும் காதல் தீயே… இனிய கொடுமை நீயே நீயே