Album: Kaatriniley
Singer: M. S. Subbulakshmi
Music: S. V. Venkatraman
Lyrics: Amarar Kalki Krishnamurthy
Label: Saregama
Released: 2003-09-01
Duration: 03:04
Downloads: 59439
காற்றினிலே வரும் கீதம் ...காற்றினிலே காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும்
கீதம் கண்கள் பணித்திட பொங்கும் கீதம் கல்லும் கனியும் கீதம் காற்றினிலே
வரும் கீதம் பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம் பண் ஒலி பொங்கிடும்
கீதம் காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுர மோகன கீதம் நெஞ்சினிலே
...நெஞ்சினில் இன்ப கனலை எழுப்பி நினைவழிக்கும் கீதம் காற்றினிலே வரும்
கீதம் சுனை வண்டுடன் சோலை குயிலும் மனம் குவிந்திடவும் வானவெளிதனில்
தாரா கனங்கள் தயங்கி நின்றிடவும் ஆ என் சொல்வேன், மாய பிள்ளை
வேன்குழல் பொலி கீதம் காற்றினிலே வரும் கீதம்(2) நிலா மலர்ந்த
இரவினில் தென்றல் உலாவிடும் நதியில் நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல்
ஊதி நின்றான் காலமெல்லாம் ...காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமோ என்
உள்ளம் ... காற்றினிலே வரும் கீதம்(2)