Album: Nilave Ennidam
Singer: P. B. Sreenivas
Music: M.S. Viswanathan
Lyrics: Kannadasan
Label: Saregama
Released: 2019-07-12
Duration: 04:40
Downloads: 265728
பெ: நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி... நித்திரையில்
வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி... (இசை) ஆ: நிலவே
என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நானில்லை மலரே என்னிடம் மயங்காதே நீ மயங்கும்
வகையில் நானில்லை நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை...
(இசை) ஆ: கோடையில் ஒரு நாள் மழை வரலாம் என் கோலத்தில்
இனிமேல் எழில் வருமோ கோடையில் ஒரு நாள் மழை வரலாம் என்
கோலத்தில் இனிமேல் எழில் வருமோ பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ... ஆ: நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நானில்லை... (இசை) ஆ: ஊமையின் கனவை யார்
அறிவார் (2) என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார் மூடிய மேகம்
கலையுமுன்னே நீ பாட வந்தாயோ வெண்ணிலவே... ஆ: நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நானில்லை... (இசை)... ஆ: அமைதி இல்லாத நேரத்திலே
(2) அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான் நிம்மதி இழந்து நான்
அலைந்தேன் இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்... ஆ: நிலவே
என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை... மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நானில்லை நிலவே என்னிடம் நெருங்காதே நீ
நினைக்கும் இடத்தில் நானில்லை... (மீகா)