Album: Oru Paadal
Singer: S.P. Balasubrahmanyam, Vani Jayaram
Music: Sankar-Ganesh
Lyrics: Pulamaipithan
Label: Saregama
Released: 1984-12-31
Duration: 05:58
Downloads: 4852
நான் பெத்தெடுத்திடாத முத்து மணித் தேரே நான் தத்தெடுத்திடாத தங்க மணிச்
சீரே ஒரு சொந்தமிருந்தும் பந்தமிருந்தும் சொல்லவில்லையே அடி கண்ணே தூங்காதே சிறு
பெண்ணே கலங்காதே ஒரு பாட்டாலே சொல்லி அணைச்சேன் ஒரு பலன்
கேட்டு கண்ணு முழிச்சேன் அடி ஆத்தாடி ஒன்ன நெனச்சேன் ஒரு அன்பால
மெட்டுப் படிச்சேன் உன் சோகம் பறக்க என் பாட்டு விருந்து அதக்
கேட்டு மறந்தா என் பாட்டு மருந்து உன் கூட இருந்தா அது
போதும் எனக்கு வாடியிருந்தா துன்பம் எனக்கு ஒரு பாட்டாலே சொல்லி அணைச்சேன்
ஒரு பலன் கேட்டு கண்ணு முழிச்சேன் நான் ஆதாரம் இல்லா
அந்தரத்து வானம் என் நாவோடு சேரும் நாட்டுப்புற கானம் என் சொந்தக்
கதைய சொல்லிப் படிக்கச் சந்தமில்லையே அதச் சொன்னா ஆறாது என் சொந்தம்
மாறாது நான் தாயாரைப் பார்த்ததுமுண்டு ஆனா தாயின்னு சொல்லவுமில்லே தெனம்
பாலூட்டி என்ன வளர்த்த பரிவான சொந்தமும் இல்லை இந்த ஊரு முழுக்க
என் பந்து ஜனங்க உண்மையிருக்கும் வெள்ளை மனங்க ஒரு காவலிருக்கு என்
கை வணங்க நான் கானம் படிச்சேன் கண்ணெ தொறக்க நான்
தாயாரைப் பார்த்ததுமுண்டு ஆனா தாயின்னு சொல்லவுமில்லே ஒரு ஈ எறும்பு
கடிச்சாலும் தாய் மனசு நோகும் நீ பாய் விரிச்சு படுத்தாலே இப்ப
என்ன ஆகும் ஒன்ன அள்ளி எடுத்து ஊட்டி வளத்து காத்துக் கிடந்தா
அந்தத் தாயோட மொகம் பாரு கண்ணு ஒரு நாளும் உறங்காது நான்
பாடாத பாட்டுகளில்லை அதக் கேக்காத ஆட்களுமில்லை நா நாவாரப் பாடி அழைச்சா
வந்த பாக்காத பார்வையுமில்லை என் தாயி கொடுத்த ஒரு சக்தியிருக்கு ஒன்ன
தட்டியெழுப்ப புத்தி இருக்கு ஒன்ன தாவியணைக்க ஒரு நேரம் இருக்கு அந்த
நேரம் வரைக்கும் பாரம் இருக்கு நான் பாடாத பாட்டுகளில்லை அதக் கேக்காத
ஆட்களுமில்ல