Album: Thenoorum Thanneerin
Singer: P. Susheela
Music: Viswanathan-Ramamoorthy
Lyrics: Kannadasan
Label: Saregama
Released: 1964-12-31
Duration: 04:01
Downloads: 51315
தேனோடும் தண்ணீரின் மீது மீனோடு மீனாக ஆடு செவ்வாழைக் கால்கள் பொன்வண்டுக்
கண்கள் ஜில்லென்று நீராட ஆடு தேனோடும் தண்ணீரின் மீது மீனோடு மீனாக
ஆடு செவ்வாழைக் கால்கள் பொன்வண்டுக் கண்கள் ஜில்லென்று நீராட ஆடு
தத்தித் தத்திச் செல்லும் தவளைகள் உன்னை தங்கை போல் நினைக்கட்டுமே தாமரை
இல்லா குளத்தினில் உன் முகம்தாமரை ஆகட்டுமே தேனோடும் தண்ணீரின் மீது மீனோடு
மீனாக ஆடு செவ்வாழைக் கால்கள் பொன்வண்டுக் கண்கள் ஜில்லென்று நீராட ஆடு
சின்னச் சின்னத் தோணி தவழ்வது போல கன்னி உடல் மிதக்கட்டுமே
திருமகள் கொண்ட மருமகள் போலே ராஜாங்கம் நடக்கட்டுமே தேனோடும் தண்ணீரின் மீது
மீனோடு மீனாக ஆடு செவ்வாழைக் கால்கள் பொன்வண்டுக் கண்கள் ஜில்லென்று நீராட
ஆடு கட்டவிழ்ந்த கூந்தல் வெட்டிவேர் போலே தண்ணீரில் நனையட்டுமே கூந்தலின்
வாசம் காற்றினில் ஏறி நாடெங்கும் மணக்கட்டுமே தேனோடும் தண்ணீரின் மீது மீனோடு
மீனாக ஆடு செவ்வாழைக் கால்கள் பொன்வண்டுக் கண்கள் ஜில்லென்று நீராட ஆடு