Album: Uyire En Uyire
Music: Saindhavi, Velan Sagadevan
Lyrics: Padmavathi
Label: Trend Music
Released: 2017-01-16
Duration: 05:34
Downloads: 188
உயிரின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும் காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய்
நானாகிறேன் காலம் தாண்டி வாழவேண்டும் வேறு என்னக் கேட்கிறேன் உயிரின்
உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும் உறங்கும்போதும்
உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும் சாயங்காலம் சாயும் நேரத்தில்
தோழி போல மாறுவேன் சேர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில் தாயை போல
தாங்குவேன் வேறு பூமி வேறு வானம் தேடியே நாம் போகலாம் சேர்த்து
வைத்த ஆசையாவும் சேர்ந்து நாமங்கு பேசலாம் அகலாமலே அணுகாமலே இந்த நேசத்தை
யார் நெய்தது அறியாமலே புரியாமலே இரு நெஞ்சுக்குள் மழை தூவுது
உயிரின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும் தண்டவாளம் தள்ளி
இருந்தது தூரம் சென்று சேரத்தான் மேற்கு வானில் நிலவு எழுவது என்னுள்
உன்னைத் தேடத்தான் ஐந்து வயது பிள்ளைப் போலே உன்னை நானும் நினைக்கவா
அங்கும் இங்கும் கன்னம் எங்கும் செல்ல முத்தம் பதிக்கவா நிகழ் காலமும்
எதிர் காலமும் இந்த அன்பெனும் வரம் போதுமே இறந்தாலுமே இறக்காமலே இந்த
ஞாபகம் என்றும் வாழுமே உயிரின் உயிரே உனது விழியில் என்
முகம் நான் காண வேண்டும் உறங்கும்போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற
வேண்டும் காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய் நானாகிறேன் காலம் தாண்டி வாழவேண்டும் வேறு
என்னக் கேட்கிறேன்