Album: Yaarai Nambi
Singer: Madhu Balakrishnan
Music: Taj Noor
Lyrics: Yugabharathi
Label: Mass Audios
Released: 2013-12-20
Duration: 04:13
Downloads: 1603
யாரை நம்பி நாம் வந்தது யாரை நம்பி நாம் போவது தாயால்
தோன்றும் உயிர் காலம் தோறும் கேட்கும் கேள்விதான்... ஓடாது போனால்
ஆறில்லையே ஓய்வாகிப் போனால் நாம் இல்லையே காலங்கள் யாவையும் மாற்றிவிடும் காயத்தை
நாளைகள் ஆற்றிவிடும் யாரை நம்பி நாம் வந்தது யாரை நம்பி
நாம் போவது யாரான போதும் அழுது என்ன லாபம் நாமாக கேட்பதில்லையே
சோகம் ஓயாமலே பூமியும் வீழாமலே வானமும் மாறாமலே காட்டுது பாசம்
தானாக வாராது ஏதொன்றுமே ஆராய்ந்து பார்த்தாலே வேதாந்தமே யாரை நம்பி
நாம் வந்தது யாரை நம்பி நாம் போவது தாயாலே தோன்றி தவழ்ந்து
வந்த பிள்ளை தாயாக பார்ப்பதில்லை பெண்ணை ஓராயிரம் வேதனை நூறாயிரம் சோதனை
நாடோடிப்போல் ஆனதே வாழ்வும் யாரோடு யாரென்று யார் சொல்வது? எல்லாமே
சூதாட்டம் என் செய்வது? யாரை நம்பி நாம் வந்தது யாரை
நம்பி நாம் போவது தாயால் தோன்றும் உயிர் காலம் தோறும் கேட்கும்
கேள்விதான்... ஓடாது போனால் ஆறில்லையே ஓய்வாகிப் போனால் நாம் இல்லையே
காலங்கள் யாவையும் மாற்றிவிடும் காயத்தை நாளைகள் ஆற்றிவிடும் யாரை நம்பி
நாம் வந்தது யாரை நம்பி நாம் போவது