Album: Palandu
Singer: Unnikrishnan, Senthildass
Lyrics: Vaalee
Label: Star Music
Released: 2006-01-01
Duration: 05:08
Downloads: 27103
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல் கோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வித் திருக்காப்பு அடியோனோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்
பல்லாண்டு வடிவாய் நின் வள மார்பினில் வாழ்கின்ற மங்கையின் பல்லாண்டு
வடிவார் சோதி வலத் துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு படைப்போர் புக்கும்
முழங்கும் அப்பஞ்ச சன்னியமும் பல்லாண்டே ஆ... ஆ... ஆ... ஆ
ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம் அவன்தான் நல்லருள்
இன்றும் என்றும் தரணும் அருள் மாமழையை வார்க்கும் நீல நயணம் அழியா
மேன்மை வாழ்வு வாசல் வரணும் அவன்தான் ரங்கன் அரங்கன் மறை
நூல் ஞான சுரங்கன் மதுசூதன் மணிவண்ணன் திருநாமம் பாட பாட இன்பம்
ஹரி ஓம் மாதவன் ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும்
சரணம் அவன்தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும் கோவிலில் நாள்தோறும்
பூவாரம் சூட்டியே பூஜைகள் செய்கின்றவன் வீட்டினில் அதுபோல தாய் தன்னை போற்றியே
சேவைகள் செய்கின்றவன் அவன்தான் நல்ல மனிதன் அவன் போல் இல்லை
புனிதன் பால் போல் வெண்மை இதயம் பரி போல் மென்மை வடிவம்
அவன் தாயாரை தாலாட்டி தாயாகிப் போனானே ஹரி ஓம் மாதவன்
ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம் அவன் தான் நல்லருள்
இன்றும் என்றும் தரணும் தங்கையை இன்னும் ஓர் தாயாக போற்றியே
பாசங்கள் வார்க்கின்றவன் தாயினும் மேலான அன்பை தான் காட்டியே நேசங்கள் வளர்க்கின்றவன்
இதுதான் நல்ல குடும்பம் இதில்தான் தெய்வம் விளங்கும் வாழும் மூவர்
உறவும் வண்ண தமிழின் வடிவம் இது எந்நாளும் ஆனந்தம் கொண்டாடும்
வீடாகும் ஹரி ஓம் மாதவன் ஹரி ஓம் மாதவன் பாதம்
என்றும் சரணம் அவன் தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்