Album: Senthazhampoovil
Singer: K.J. Yesudas
Music: Ilaiyaraaja
Lyrics: Kannadasan
Label: Saregama
Released: 2019-11-18
Duration: 04:35
Downloads: 1599597
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா பூவாசம் மேடை போடுதம்மா பெண்
போல ஜாடை பேசுதம்மா அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம் வளைந்து நெளிந்து
போகும் பாதை மங்கை மோக கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசைக் குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள்
தேவன் கலைகள் செந்தாழம் பூவில் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் ஜரிகை
நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள் பள்ளம் சிலர் உள்ளம்
என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த
நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி செந்தாழம் பூவில் செந்தாழம்
பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா இளைய பருவம் மலையில்
வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை இதழை வருடும் பனியின் காற்று கம்பன்
செய்த வர்ணனை ஓடை தரும் வாடைக் காற்று வானுலகைக் காட்டுது உள்ளே
வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது மறவேன் மறவேன் அற்புதக்
காட்சி செந்தாழம் பூவில் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்
மீது மோதுதம்மா பூவாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம்