Album: Vinmeen
Singer: Ratty Adhiththan
Label: OruNation Entertainment
Released: 2022-01-01
Duration: 03:34
Downloads: 3048
கடந்த காலமும் மறைந்த வானமும் உனக்கும் எனக்கும் உரைத்த பாடம் ஏராளம்.
என்னை வருத்தி உன்னைக் கவர்ந்த காதல் இனி போதும், சுயத்தை மறந்து
நிஜத்தை தொலைத்த நிறங்கள் இனி சாகும். ஆதித்தன் நான்; தனிமையைத்
தாயாக்கி இரவினை வீடாக்கி கவிதை எனும் கோட்டையிலே கர்ஜிப்பவன் நான். கனவுகளில்
மட்டும் வாழ்ந்து விட்டேன். கற்பனைகளை மட்டுமே காதலித்தேன். இருந்தாலும் உன் நினைவுகள்
பசுமரதானி போல என்றென்றும் என் மனதுக்குள் புதைந்து கிடக்கின்றன.