Album: Santhosam
Music: Sripathi Panditaradhyula Balasubrahmanyam, Vairamuthu, Mani Sharma
Label: Sony Music / Eros Now Music
Released: 2002-07-19
Duration: 04:24
Downloads: 267583
சந்தோஷம் சந்தோஷம் வாழ்கையின் பாதி பலம் சந்தோஷம் இல்லை என்றால் மனிதர்க்கு
ஏது பலம் புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு எந்த
தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு சந்தோஷம் சந்தோஷம் வாழ்கையின் பாதி பலம்
சந்தோஷம் இல்லை என்றால் மனிதர்க்கு ஏது பலம் புயல் மையம் கொண்டால்
மழை மண்ணில் உண்டு எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு வெற்றியை
போலவே ஒரு தோல்வியும் நல்லதடி வேப்பம்பூவிலும் சிறு தேன் துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி இழையும் புண்ணகையால் நீ இருட்டுக்கு
வெள்ளையடி தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் நாகரிகம் பிறந்ததடி தவறுகள்
குற்றம் அல்ல சரிவுகள் வீழ்ச்சி அல்ல பாடம்படி பவளக்கொடி உள்ளம் என்பது
கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டி இல்லை உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால்
நாளை துன்பம் இல்லை புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு ஆதியில் ஆண்டவன் இந்த பூமியை
படைத்தானே அவன் ஆசையை போலவே இந்த பூமி அமையலையே ஆண்டவன் ஆசையே
இங்கு பொய்யாய் போய்விடில் மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா நன்மை என்றும்
தீமை என்றும் நாலு பேர்கள் சொல்லுவது நம்முடைய பிழை இல்லையே துன்பமென்ற
சிப்பிக்குள் இன்பமென்ற முத்து வரும் துனிந்த பின் பயம் இல்லையே கண்ணீர்
துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள் காலுக்கு செருப்பு எப்படி வந்தது
முள்ளுக்கு நன்றி சொல் புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு சந்தோஷம் சந்தோஷம் வாழ்கையின் பாதி
பலம் சந்தோஷம் இல்லை என்றால் மனிதர்க்கு ஏது பலம்