Album: Tamizhukkum Amuthendru
Singer: Roja Aditya
Music: Apk Praveen Kumar
Lyrics: Thiru Thirukumaran
Label: Methagu
Released: 2021-08-03
Duration: 03:29
Downloads: 1506
தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு
நேர் தமிழுக்கு நிலவென்று பேர்! இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு
நீர் தமிழுக்கு மணமென்று பேர்! இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த
ஊர் தமிழுக்கு மதுவென்று பேர்! இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு
வேர்! எட்டுத்தொகை ஏட்டுக்குள்ள, என்புருக்கும் பாட்டுகளை சொட்டச் சொட்டச் சொல்லி
நெஞ்சம் சொக்கவைத்த சோதி மொழி பத்துப்பாட்டுச் சொல்லும் மண்ணின் சத்துப் பாட்டுகள்
ஜந்திணையை வித்துவித்தா நட்டு எங்கள் சொத்து ஆன சூரமொழி விஞ்ஞானம் சொல்லுமந்த
மெய்ஞானம் என்னவென்று தொன்நூலின் காப்பியத்தில் காட்டி விட்ட ஆதி மொழி நாலடிக்குள்
சொல்ல வைத்த நல்லுலகின் தொல்லறத்தை ஈரடுக்குள் சொல்ல வைத்து எட்டுவரை சொல்லும்
மொழி மூவேந்தராண்ட மொழி, முச்சங்கம் கண்ட மொழி பாவேந்தர் வேந்தரென பாருமென்று
வாழ்ந்த மொழி போர்ப்பரணி பாடு மொழி போரிலறம் பார்த்த மொழி ஆர்ப்பரித்த
வங்கத் தாண்டி ஆட்சி செய்த அன்பு மொழி தமிழ் எங்கள்
இளமைக்குப் பால் இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் தமிழ்
எங்கள் உயர்வுக்கு வான்! இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்கு தோள் இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின்
வாள் தமிழ் எங்கள் பிறவிக்கு தாய்! இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க
உளமுள்ற தீ! தென்னாட்டின் ஊற்று மொழி தேனிக்குணமான மொழி அந்நாளில்
வாழ்ந்தபடி இந்நாளும் வாழும் மொழி வான் தோன்றி விட்டதென வையமுள்ளோர் கண்டதினம்
தான்தோன்றி வந்த மொழி தான் இரவல் அற்ற மொழி வேற்று மொழிச்
சொற்களேதும் ஏற்றுக் கொள்ளத் தேவையின்றி ஊற்று கொண்ட சொல்லைக் கொண்டே ஆற்றல்
கண்ட எங்க மொழி வேல்வீசி வேந்தர் வாகை வெட்சி சூடி ஆண்ட
முதல் கோலம் மாறிக் காலம் போயும் மாறிடாத எங்க மொழி