Album: Thamizh Eezha Kaatrae
Music: Vairamuthu, Sathyaprakash D, Isai Arasan
Lyrics: Vairamuthu
Label: Vairamuthu
Released: 2021-05-09
Duration: 04:52
Downloads: 46140
தமிழ் ஈழக் காற்றே! இந்த நூற்றாண்டின் மறக்க முடியாத மனிதத் துயரம்
ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தான் கடல் கடந்து அகதிகள் நிகழகாலத் தாயகத்தை
நினைத்து நினைத்து நெஞ்சு வேகிறார்கள் தமிழ் ஈழக் காற்றே! தமிழ்
ஈழக் காற்றே! விண்ணின் வழி வந்து வீசு எங்கள் மண்ணின் சுகம்
கண்டு பேசு தமிழ் ஈழக் காற்றே தமிழ் ஈழக் காற்றே
விண்ணின் வழி வந்து வீசு எங்கள் மண்ணின் சுகம் கண்டு பேசு
உயிரைக் கொடுத்த அன்னை கயிறாய் கிடப்பாளோ? எலும்பைக் கொடுத்த தந்தை
நரம்பாய் கிடப்பாரோ? நல்லூர் முருகன் கோயில்மணியில் நல்ல சேதி வருமோ?
உள்ளூர் வாழும் ஊமை ஜனங்கள் உயிரும் உடலும் நலமோ? ஓடிய
வீதிகள் சுகமா? எங்கள் ஒருதலைக் காதலி சுகமா? பாடிய பள்ளிகள் சுகமா?
உடன் படித்த அணில்கள் சுகமா? ஒருமுறை வந்து சொல்லிப்போ! எங்கள்
உயிரை கொஞ்சம் அள்ளிப்போ! தமிழ் ஈழக் காற்றே தமிழ் ஈழக்
காற்றே விண்ணின் வழி வந்து வீசு எங்கள் மண்ணின் சுகம் கண்டு
பேசு முல்லைத் தீவின் கதறல் மூச்சில் வலிக்கிறதே நந்திக் கடலின்
ஓலம் நரம்பை அறுக்கிறதே பிள்ளைக்கறிகள் சமைத்து முடித்த தீயும் மிச்சம்
உள்ளதோ? எங்கள் ஊரை எரித்து மீந்த சாம்பல் சாட்சி உள்ளதோ?
வன்னிக்காடுகள் சுகமா? எங்கள் வல்வெட்டித்துறையும் சுகமா? காய்ந்த கண்ணீர் சுகமா? இன்னும்
காயாத குருதியும் சுகமா? ஒருமுறை வந்து சொல்லிப்போ! எங்கள் உயிரை
கொஞ்சம் அள்ளிப்போ! தமிழ் ஈழக் காற்றே தமிழ் ஈழக் காற்றே
விண்ணின் வழி வந்து வீசு எங்கள் மண்ணின் சுகம் கண்டு பேசு