Album: Chinnappayalae
Singer: T.M. Soundararajan
Music: G. Ramanathan
Lyrics: Pattukkottai Kalyanasundaram
Label: Saregama
Released: 2018-01-10
Duration: 03:58
Downloads: 640823
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா நான்
சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா நீ எண்ணிப்பாரடா சின்னப்பயலே சின்னப்பயலே
சேதி கேளடா ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு
அதுவே நீ தரும் மகிழ்ச்சி ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும்
மகிழ்ச்சி நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி
உன் நரம்போடு தான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி உன் நரம்போடு
தான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா தம்பி மனதில் வையடா
மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா தம்பி மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா நீ வலது கையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா நீ வலது கையடா
தனி உடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா நீ தொண்டு
செய்யடா தனி உடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா நீ தொண்டு
செய்யடா தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா எல்லாம் பழைய
பொய்யடா சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா வேப்ப மர உச்சியில்
நின்று பேயொன்று ஆடுதுன்னு வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி
வைப்பாங்க வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேலையற்ற வீணர்களின் மூளையற்ற
வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே நீ வீட்டிற்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே
நீ வெம்பி விடாதே சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா