Album: Kasethan Kadavulappa
Singer: T.M. Soundararajan
Music: S. M. Subbaiah Naidu
Lyrics: Vaalee
Label: Saregama
Released: 1968-12-31
Duration: 03:25
Downloads: 396648
காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா அந்த கடவுளுக்கும் இது
தெரியுமப்பா காசேதான் கடவுளப்பா கடவுளுக்கும் இது தெரியுமப்பா கைக்கு கை மாறும்
பணமே உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே கைக்கு கை மாறும் பணமே
உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே நீ தேடும்போது வருவதுண்டோ விட்டுபோகும்போது சொல்வதுண்டோ
நீ தேடும்போது வருவதுண்டோ விட்டுபோகும்போது சொல்வதுண்டோ காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும்
இது தெரியுமப்பா அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும்
அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும் வரவுக்கு மேலே
செலவுகள் செய்தால் அவனும் குருடனும் ஒன்றாகும் களவுக்கு போகும் பொருளை எடுத்துத்
வறுமைக்கு தந்தால் தருமமடா களவுக்கு போகும் பொருளை எடுத்துத் வறுமைக்கு தந்தால்
தருமமடா பூட்டுக்கு மேலே பூட்டை போட்டு பூட்டி வைத்தால் அது கருமமடா
காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா கொடுத்தவன் முழிப்பான் எடுத்தவன்
முடிப்பான் அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே கொடுத்தவன் முழிப்பான் எடுத்தவன் முடிப்பான் அடுத்தவன்
பார்த்தால் சிரிப்பானே சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிப்பதும் பணத்தால் வந்த நிலை
தானே சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிப்பதும் பணத்தால் வந்த நிலை தானே
கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால் கூட்டமிருக்கும் உன்னோடு தலைகளையாட்டும் பொம்மைகள் எல்லாம் தாளங்கள்
போடும் பின்னோடு காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா கைக்கு
கை மாறும் பணமே உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே நீ தேடும்போது
வருவதுண்டோ விட்டு போகும்போது சொல்வதுண்டோ நீ தேடும்போது வருவதுண்டோ விட்டு போகும்போது
சொல்வதுண்டோ காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா