Album: Netrum Indrum
Singer: Sachin Warrier
Music: Sachin Warrier
Lyrics: Thamarai
Label: Think Music
Released: 2023-05-21
Duration: 04:43
Downloads: 9764
நேற்றும் இன்றும் இருதினம் ஏன் எனக்கு மட்டும் புதுயுகம் அரும்பு மலர
அரைக்கணம் அது மலர்ந்தது எந்தன் புது முகம் தே மாதுளை
இதழ்களால் தேன் வார்த்தைகள் உதிர்க்கிறாள் நான் பார்த்தை பார்த்துமே பாராததாய் நடிக்கிறாள்
இந்த நாடக அரங்கில் நாட்கள் நகருதே இந்தக் காவியக் கதையில்
காய்ச்சல் கனலுதே ஹேய் காற்றும் இவளே ஹேய் தோள் சிறகும்
இவளே ஹேய் என் வானம் முகில் மழை அனைத்துமே இவள்
நேற்றும் இன்றும் இருதினம் ஏன் எனக்கு மட்டும் புதுயுகம் அரும்பு மலர
அரைக்கணம் அது மலர்ந்தது எந்தன் புது முகம் பேச வேண்டி
வருவேனே ஓடி உனை பார்த்ததும் மறந்து போகும் சேதி ஒத்திகைகள் பல
வீட்டில் செய்தும் அவை போதவில்லை அது தானே மீதி புரியாத
பல கேள்வி வந்தும் பிரியாத வரம் வேண்டிக் கொள்வேன் அறியாத வயதென்று
சொல்வாய் அதை நான் எழுதி தாண்டிச் செல்வேன் இது சூரியகாந்தி பூவின்
இதயமே நீ போகிற திசையில் தானே திரும்புமே ஹேய் காற்றும்
இவளே ஹேய் தோள் சிறகும் இவளே ஹேய் என் வானம் முகில்
மழை அனைத்துமே இவள் தூக்கம் வந்து இரு கண்ணை சுழட்டும்
உன் பிம்பம் வந்து இடை நின்று கெடுக்கும் புத்தகங்கள் பல பாடம்
உரைக்கும் அதில் மீண்டும் மீண்டும் இவள் பெயரே உதிக்கும் பலர்
சூழ வரும் கூட்டம் என்றால் உனை மட்டும் தனியாக பார்ப்பேன் பலர்
கூச்சல் இடுகின்ற போது குரலாக உனை மட்டும் கேட்பேன் தினம்
பேசிட வேண்டும் பெண்ணே அனுமதி உனை பார்த்திடும் நொடிகள் எல்லாம் வெகுமதி
ஹேய் காற்றும் இவளே ஹேய் தோள் சிறகும் இவளே ஹேய்
என் வானம் முகில் மழை அனைத்துமே இவள் நேற்றும் இன்றும்
இருதினம் ஏன் எனக்கு மட்டும் புதுயுகம்